மதுரை

மாடியிலிருந்து  தவறி விழுந்த பெண் பலி

4th Sep 2019 09:52 AM

ADVERTISEMENT

மதுரையில் இருவேறு சம்பவங்களில் தவறி விழுந்த பெண் உள்பட இருவர் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.
மதுரை பேச்சியம்மன் படித்துறையைச் சேர்ந்த கணேசன் மனைவி ஆனந்தவள்ளி(33). இவர் திங்கள்கிழமை மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில், பலத்த காயமடைந்த ஆனந்தவள்ளியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து  திலகர்திடல் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தவர் பலி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டியன்(50). இவர், தனியார் லாரி நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் வாடிப்பட்டி - கரட்டுப்பட்டி சாலையில் சென்றபோது பாண்டியன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்த, அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் திங்கள்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT