மதுரை

"மழை நீரை வீணாக்காமல் சேமிப்பதில்  ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்'

4th Sep 2019 09:53 AM

ADVERTISEMENT

ஒரே பகுதியில் மொத்தமாகப் பெய்யும் பருவ மழை நீரை வீணாக்காமல் சேமிப்பதில்  நாம் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என நீர்மேலாண்மை மற்றும் பாதுகாப்பு இயக்கத்தின் உதவிச் செயலர் சுகபுத்ரா வலியுறுத்தினார்.
மதுரை வேளாண்.அறிவியல் மைத்தின் சார்பில் நீர் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு விழா வேளாண். கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
விழாவில் சுகபுத்ரா பேசியது: நாட்டில் ஆண்டுதோறும் பெய்துவரும் சராசரி பருவமழை அளவு குறையவில்லை. ஆனால், மழை பெய்யும் காலத்தில்தான் மாற்றம் ஏற்பட்டு, ஒரேசமயத்தில் மழை பெய்துவிடுகிறது. இதனால், ஒருபுறம் வெள்ளமும், மற்றொரு புறம் தண்ணீர் தட்டுப்பாடும் நிலவுகிறது. மொத்த மழை நீரையும் நாம் சேமிக்கவேண்டும்.  நிலத்தடி நீரை செறிவூட்டலாம். நீரோடைகளும், பாசன குளங்களும், ஆக்கிரமிக்கப்படுவதால் மழைநீர் பெய்த இடத்திலிருந்து வேறு பகுதிக்கு சென்று விடுகிறது.  நீர் ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும். மழை குறைவான இஸ்ரேல் நாட்டில் தண்ணீரை வீணாக்காமல் சேமித்து, சிக்கனமாகப் பயன்படுத்துகின்றனர். அதுபோன்ற நுட்பங்களை தெரிந்து நாம் பயன்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்பதால், மழைநீரை சேமிக்க நாம் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்றார்.
இதில், வேளாண். இணை இயக்குநர் த.விவேகானந்தன், கல்லூரி முதல்வர் வி.கு. பால்பாண்டி,
வேளாண். செயற்பொறியாளர் மா.சுரேஷ்குமார் ஆகியோர் மழை, குளங்கள், பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் மேம்பாடு குறித்து பேசினர்.  
மழைநீர் சேகரிப்பு குறித்து விவசாயிகள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். வேளாண்.அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்விரமேஷ் வரவேற்றார். உதவிப் பேராசிரியை செல்வராணி நன்றி கூறினார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT