மதுரை

மதுரை அருகே  ராணுவ வீரரின்  மகள் தீயில் கருகி பலி

4th Sep 2019 09:51 AM

ADVERTISEMENT

மதுரை அருகே தீயில் சிக்கி பலத்த காயமடைந்து சிகிச்சைப் பெற்று வந்த ராணுவ வீரரின் மகள் சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம், பேரையூர் அருகே பி.தொட்டியபட்டி கணபதி நகரைச் சேர்ந்த வெம்பாண்டியன். இவர்  ராணுவ வீரராக ஊட்டியில் பணியாற்றி வருகிறார். இவரது மகள் கவிதா(22). கடந்த ஜூலை 27 ஆம் தேதி வீட்டில் உள்ள பூஜை அறையில் கவிதா விளக்கு ஏற்றினாராம். அப்போது, எதிர்பாராத விதமாக அவரது உடையில் தீ பற்றி கவிதா பலத்த காயமடைந்தார்.
 இதையடுத்து, குடும்பத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுதித்தனர். கடந்த ஒரு மாதத்திற்கு மேல் சிகிச்சை பெற்ற வந்த கவிதா திங்கள்கிழமை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 
இது குறித்து அவரது தாயார் ஜெயலட்சுமி அளித்த புகாரின் பேரில் பேரையூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT