மதுரை

மதுரையில் போக்குவரத்து விதிமீறல்: ஒரே நாளில் 1,517 பேர் மீது வழக்கு

4th Sep 2019 09:54 AM

ADVERTISEMENT

மதுரையில் திங்கள்கிழமை மட்டும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 1,517 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து ரூ.1.94 லட்சம் அபராதம் வசூலித்துள்ளனர்.
இது தொடர்பாக மாநகர் காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்தி: மதுரை மாநகரில் திங்கள்கிழமை ஒரே நாளில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 1,517 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
இதில், தலைகவசம் அணியாமல் பயணித்த வாகன ஓட்டிகள் 1,052 பேர், காரில் இருக்கை பெல்ட் அணியாமல் பயணம் செய்த 77 பேர்,  ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிய 67 பேர், மதுபோதையில் வாகனம் ஓட்டிய 28 பேர் மற்றும் செல்லிடப்பேசியில் பேசியபடி வாகனம் ஓட்டியவர்கள், இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தது என போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மொத்தம் 1,517 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 
இந்த வழக்குகள் அனைத்தும் திங்கள்கிழமை ஒரே நாளில் பதிவு செய்யப்பட்டு வாகன ஓட்டிகளிடம் ரூ.1.94 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 2 ஆம் தேதி வரை பேக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 4,432 வாகன ஓட்டிகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. 5,235 வாகன ஓட்டிகளின் உரிமம் தற்காலிமாக ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT