மதுரை

தோட்டக்கலைத் துறை சார்பில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி

4th Sep 2019 09:55 AM

ADVERTISEMENT

கிராமப்புற இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையில் தோட்டக்கலைத் துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் நடத்தும்  குறுகிய கால பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
  தோட்டக்கலைத் துறையால் செயல்படுத்தப்படும் நுண்ணீர் பாசனம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், மானாவாரி பகுதி மேம்பாடு, தேசிய தோட்டக்கலை இயக்கம் ஆகிய திட்டங்களில் நுண்ணீர் பாசன அமைப்புகள் நிறுவுதல், நிழல் வலைக் குடில்கள் அமைத்தல், பசுமைக் குடில் அமைத்தல் போன்ற தொழில்நுட்பம் தெரிந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன. மேலும் அரசு தோட்டக்கலை பண்ணைகள் மற்றும் பூங்காக்களில் தோட்டங்கள் வடிவமைத்தல், புல் தரை அமைத்தல் போன்ற பணிகளிலும் பணி வாய்ப்புகள் இருக்கின்றன.
 இந்த வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கும், தோட்டக்கலை சார்ந்த புதிய தொழில் தொடங்குவதற்கும் இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இருப்பினும் வணிக ரீதியிலான தொழில் மேற்கொள்வதற்கு முறையான பயிற்சி அவசியமாகிறது.
 இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து தோட்டக்கலைத் துறையும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமும் இணைந்து கிராமப்புற இளைஞர்களுக்கு குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சியை அளித்து வருகின்றன. இப் பயிற்சி குறித்த விவரங்கள், விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பப் படிவங்களை இத்துறையின் இணையதளத்தில் (‌w‌w‌w.‌h‌o‌r‌t‌i​c‌u‌l‌t‌u‌r‌e.‌t‌n.‌g‌o‌v.‌i‌n) அறிந்து கொள்ளலாம்.
 குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் இந்த பயிற்சியைப் பெறலாம். பயிற்சி தொடர்பான விவரங்களுக்கு 0452-2532351 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT