மதுரை

உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியர்களுக்கு அறிவுறுத்தல்

4th Sep 2019 09:54 AM

ADVERTISEMENT

மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்காத வருங்கால வைப்புநிதி ஓய்வூதியர்கள்,  உடனடியாக அச் சான்றிதழை வங்கிக் கிளைகள் மூலமாக சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
  தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியர்களில், மின்னணு முறையில்  உயிர்வாழ் சான்றிதழ் பதிவு செய்யாதவர்களின் ஓய்வூதியப் பலன்கள் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஆக்சிஸ் வங்கி,  ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎப்சி வங்களில் மட்டும் ஓய்வூதியர்களுக்கு உயிர்வாழ் சான்றிதழ் புதுப்பித்து வருகின்றனர்.
  ஆகவே, ஓய்வூதியர்கள் தங்களது ஆதார் அட்டை மற்றும் செல்லிடப்பேசியுடன் மேற்குறிப்பிட்ட வங்கிகளின் கிளைகளை அணுகி உயிர்வாழ் சான்றிதழைப் புதுப்பித்துக் கொள்ளலாம். 
ஓய்வூதியம் பெறுவோரின் கைரேகை பதிவு செய்வதில் ஏதேனும் தொழில்நுட்ப சிரமங்கள் இருந்தால், உயிர்வாழ் சான்றிதழ் படிவத்தை வங்கி மேலாளரின் சான்றொப்பம் பெற்ற பிறகு மதுரையில் உள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலகம் அல்லது மாவட்ட அலுவலகங்களில் சமர்ப்பித்து ஓய்வூதியத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
 மேற்குறிப்பிட்ட விவரங்கள் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்காமல் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும். தற்போது ஓய்வூதியம் பெறுபவர்கள், தங்களது உயிர்வாழ் சான்றிதழை வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பதிவு செய்தால் போதுமானது.
 தொழிலாளர் வருங்கால வைப்புநிதி உதவி ஆணையர் பி.சுனில் இத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT