மதுரை

அரசு ராஜாஜி மருத்துவமனை தேவைகள் குறித்த அறிக்கை: தேசிய நலவாழ்வு குழும இயக்குநரிடம் அளிக்கப்பட்டது

4th Sep 2019 09:52 AM

ADVERTISEMENT

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தேவையான கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையை தேசிய நலவாழ்வு குழும இயக்குநரிடம், மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் வழங்கினார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் மேம்பாடு மற்றும் தேவைகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தலைமையில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி நடைபெற்றது. இதில், அனைத்து மருத்துவத்துறை தலைவர்கள் கலந்துக் கொண்டு, போதிய மருத்துவர்கள், செவிலியர்கள்,  மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்படவேண்டும். சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்கள் காலாவதியாகும் நிலையில் உள்ளதால், புதிய மருத்துவ உபகரணங்கள் வாங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தேவைகளை மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தேவைகள் குறித்த அறிக்கை தயார் செய்யப்பட்டது. அந்த அறிக்கையை மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், தேசிய நலவாழ்வு குழுமத்தின் இயக்குநர் தாரேஷ் அகமத்தை சென்னையில் சனிக்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கைகள் குறித்த அறிக்கையை வழங்கினார். மேலும், மருத்துவமனைக்கு உடனடி தேவைகளை விரைந்து நிறைவேற்றி தரவேண்டும் என அவர் அப்போது வலியுறுத்தி உள்ளார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT