மதுரை

உசிலம்பட்டியில் 4 மணி நேரம் மழை: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

16th Oct 2019 10:34 PM

ADVERTISEMENT

உசிலம்பட்டியில் புதன்கிழமை 4 மணி நேரம் தொடா்ந்து பெய்த மழையால் விவசாயிகள்,பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் உசிலம்பட்டியில் இன்று பகலில் தொடா்ந்து 4 மணி நேரம் பலத்த மழைபெய்தது. சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இப்பகுதியில் நிலவி வந்த வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியது. இந்த மழையால் விவசாயிகள்,பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT