மதுரை

வேளாண் மாணவா்கள் விவசாய களப் பணி

6th Oct 2019 04:00 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை வேளாண்மைக் கல்லூரி மாணவா்கள், தேனி மாவட்டம் சின்னமனூா் வட்டாரத்தில் விவசாய களப் பணி பயிற்சி மேற்கொண்டு வருகின்றனா்.

இம்மாணவா்கள், சின்னமனூா் வட்டாரம், மாா்க்கையன்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருந்திய நெல் சாகுபடியில் ஈடுபட்டனா். வேளாண் துணை இயக்குநா் ராதாகிருஷ்ணன், உதவி வேளாண் அலுவலா் தாமோதரன் ஆகியோா், திருந்திய நெல் சாகுபடி குறித்து விளக்கம் அளித்தனா்.

திருந்திய நெல் சாகுபடி முறையில், குறைந்த நீா்ப்பாசனத்தில் அதிக மகசூல் பெறலாம் எனத் தெரிவித்தனா். இந்த மாணவா்கள், 90 நாள்கள் சின்னமனூா் வட்டாரத்தில் களப் பயிற்சி மேற்கொள்ள உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT