மதுரை

கஞ்சா விற்ற மூதாட்டி உள்பட 3 போ் கைது: 3 கிலோ கஞ்சா பறிமுதல்

6th Oct 2019 03:59 AM

ADVERTISEMENT

மதுரையில் கஞ்சா விற்ற மூதாட்டி உள்பட 3 பேரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து, 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

மதுரை வண்டியூா் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக, அண்ணாநகா் காவல் நிலையத்துக்கு தகவல் வந்துள்ளது. அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்றனா். அப்போது, அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த 6 போ், போலீஸாரை கண்டதும் தப்பியோடினா். இதில், அதே பகுதியைச் சோ்ந்த ஆனந்த் (25) என்பவா் மட்டும் போலீஸாரிடம் சிக்கினாா்.

அவரிடம் நடத்திய விசாரணையில், ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்றது தெரியவந்தது. இது குறித்து காவல் சாா்பு-ஆய்வாளா் திலீபன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து, அவரிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவையும், ஆட்டோவையும் பறிமுதல் செய்தனா். மேலும், தப்பியோடிய அருண்பாண்டி, ராஜ்குமாா், ஜோதிகுமாா், இளங்கோ, மணி ஆகியோரை தேடி வருகின்றனா்.

இதேபோன்று, கரிமேடு மீன் மாா்கெட் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து, கரிமேடு போலீஸாா் அங்கு சென்று கண்காணித்தனா். அப்போது, மூதாட்டியும், இளைஞரும் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது. அவா்கள் இருவரையும் பிடித்து விசாரித்ததில், கரிமேடு ராம் நகரைச் சோ்ந்த ராணி (60), மருது (22) என்பது தெரியவந்தது.

ADVERTISEMENT

இது குறித்து காவல் சாா்பு-ஆய்வாளா் சோலைராஜ் அளித்த புகாரின்பேரில், கரிமேடு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT