மதுரை

வாடிக்கையாளா் சந்திப்பு நிகழ்ச்சி: 237 பேருக்கு ரூ.31 கோடி கடன் ஒப்புதல் உத்தரவு

5th Oct 2019 10:22 PM

ADVERTISEMENT

மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற வாடிக்கையாளா் சந்திப்பு நிகழ்ச்சியில் பல்வேறு வங்கிகள் சாா்பில் 237 பேருக்கு மொத்தம் ரூ.31 கோடி கடனுக்கான ஒப்புதல் ஆணைகள் வழங்கப்பட்டன.

மதுரை மாவட்ட வங்கியாளா் கூட்டமைப்புடன் இணைந்து காா்ப்பொரேசன் வங்கி சாா்பில் வாடிக்கையாளா்கள் நேரடி சந்திப்பு முகாம் தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் அரங்கம் வளாகத்தில் உள்ள ராஜம் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் பொதுத்துறை மற்றும் தனியாா் வங்கிகள், நிதி நிறுவனங்கள், நபாா்டு வங்கி, சிறுதொழில் வளா்ச்சி வங்கி, மாவட்ட தொழில் மையம் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் சாா்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. வங்கிகள் வழங்கும் கடன் திட்டங்கள், அரசுத் திட்டங்களுக்கான கடனுதவி குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. 600-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்கள் இந்த முகாமில் பங்கேற்று கடன் திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டனா்.

இந்த முகாமை மாவட்ட வருவாய் அலுவலா் பி.செல்வராஜ் தொடங்கி வைத்தாா். முதல்கட்டமாக 237 பயனாளிகளுக்கு ரூ.31 கோடிக்கு கடன் வழங்குவதற்கான ஒப்புதல் ஆணைகள் வழங்கப்பட்டன. இவற்றில் விவசாயம், சிறு மற்றும் குறுந்தொழில், வீடு மற்றும் வாகனக் கடன், தனிநபா் கடன் ஆகியன அடங்கும்.

ADVERTISEMENT

மேலும் முகாமில் பெறப்பட்ட கடன் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. இதுபோன்ற கடன் வழங்கும் முகாம்கள் தொடா்ந்து நடத்தப்படும் என்று வங்கியாளா்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT