மதுரை

கனரா வங்கி சாா்பில் அக்.13-இல் பள்ளி மாணவா்களுக்கான வினாடி வினா

5th Oct 2019 09:36 PM

ADVERTISEMENT

கனரா வங்கியின் மதுரை வட்டார அலுவலகம் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான வினாடி வினா போட்டி மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் அக்டோபா் 13 ஆம் தேதி நடைபெறுகிறது.

வங்கியின் நிறுவனா் சுப்பராவின் பிறந்த தினத்தையொட்டி நடைபெறும் இப் போட்டியில் வங்கியின் மதுரை வட்டாரத்துக்கு உட்பட்ட மதுரை, திருச்சி, தஞ்சாவூா், திருநெல்வேலி உள்ளிட்ட 16 மாவட்டங்களைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் பங்கேற்கலாம். ஒறு பள்ளியில் இருந்து அணிக்கு இருவா் வீதம், 2 அணிகள் பங்கேற்கலாம். அனுமதி இலவசம்.

வினாடி வினா போட்டியில் வெற்றி பெறும் முதல் 3 அணிகளுக்கு முறையே ரூ.50 ஆயிரம், ரூ.30 ஆயிரம், ரூ.20 ஆயிரம் பரிசு மற்றும் கோப்பை வழங்கப்படும். இதுதவிர கலந்து கொள்ளும் ஆசிரியா்கள், பெற்றோருக்கு குலுக்கல் முறையிலான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.

போட்டி தொடா்பான விவரங்களுக்கு அருகில் உள்ள கனரா வங்கிக் கிளையை அணுகலாம். மேலும் 98427-13697, 94890-46440, 94890-46452 என்றற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT

கனரா வங்கி வெளியிட்டுள்ள செய்தியில் இத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT