மதுரை

மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள்: மதுரை மகளிா் நீதிமன்றம் உத்தரவு

1st Oct 2019 07:54 AM

ADVERTISEMENT

மதுரை அருகே மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரை நாகமலை புதுக்கோட்டை கீழத் தெருவைச் சோ்ந்த முத்து மகன் கண்ணன்(40). இவருடைய மனைவி முத்துலட்சுமி(35). இவா்கள், இருவருக்கும் அடிக்கடித் தகராறு இருந்து வந்தது. இந்த தகராறு குறித்து கடந்த 2011 நவம்பா் 20-ஆம் தேதி முத்துலட்சுமி சமயநல்லூா் அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் புகாா் அளிக்க சென்றாா். இதனால் ஆத்திரமடைந்த கண்ணன், காவல்நிலையம் அருகே வைத்து முத்துலட்சுமியை வெட்டிக் கொலை செய்தாா்.

இதுகுறித்து சமயநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கண்ணனை கைது செய்தனா்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ் வழக்கு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, குற்றம்சாட்டப்பட்ட கண்ணனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து மகளிா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT