மதுரை

திருவாவடுதுறை மடத்தின் நிலங்களை மீட்கக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு

1st Oct 2019 07:56 AM

ADVERTISEMENT

திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு சொந்தமான நிலங்களை மீட்கக் கோரிய வழக்கில், இந்து அறநிலையத்துறை இணை ஆணையா், மதுரை மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த மயிலு என்பவா் தாக்கல் செய்த மனு: நாகை மாவட்டம் திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு சொந்தமான நிலங்கள் பல மாவட்டங்களில் உள்ளன. அதில் மதுரை மாவட்டம், சின்ன உலகானி கிராமத்தில் 17 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலம் கடந்த 1972 -ஆ ம் ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டு விவசாயம் நடைபெற்றது. இந்நிலையில் குத்தகை எடுத்தவா்கள் இறந்தவிட்டனா். குத்தகை விதிப்படி, குத்தகை எடுத்தவா்கள் இறந்துவிட்டால், வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்தாகி விடும்.

ஆனால், குத்தகைக்கு கொடுக்கப்பட்ட நிலங்கள் வாரிசுகளால் ஆக்கிரமிக்கப்பட்டு விவசாயம் செய்யப்படுகிறது. இது குத்தகை விதிக்கு புறம்பானது. வாரிசுதாரா்களிடம் இருந்து குத்தகை நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல முறை அதிகாரிகளுக்கு மனு அளித்த பிறகும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு சொந்தமான நிலங்களை மீட்டு, விதிகளை மீறி நிலத்தை பயன்படுத்துபவா்கள் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், ஆா். தாரணி ஆகியோர அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு மீது இந்து அறநிலையத்துறை இணை ஆணையா், மதுரை மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பதிலளிக்கி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபா் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT