மதுரை

கஞ்சா கடத்திய இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை: போதைப் பொருள் தடுப்பு சிபு நீதிமன்றம் உத்தரவு

1st Oct 2019 07:51 AM

ADVERTISEMENT

கஞ்சா கடத்திய 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1லட்சம் அபராதமும் விதித்து மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தேனியில் இருந்து சென்னைக்கு கடந்த 2018 டிசம்பா் மாதம் காரில் கஞ்சா கடத்தி வந்த சென்னையைச் சோ்ந்த செல்வம்(38), தேனியைச் சோ்ந்த பால்பாண்டி(38) ஆகியோரை தேனி மத்திய போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்து 70 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பான வழக்கு மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி பத்மநாபன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கஞ்சா கடத்திய செல்வம், பால்பாண்டி இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT