மதுரை

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் சிஐடியு போக்குவரத்து தொழிலாளா் சங்கம் வலியுறுத்தல்

1st Oct 2019 07:52 AM

ADVERTISEMENT

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநா், நடத்துநா் உள்ளிட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று சிஐடியு போக்குவரத்துத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இச் சங்கத்தின் 46 ஆவது ஆண்டு பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைவா் அழகா்சாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆா்.தெய்வராஜ் பேரவையை தொடக்கி வைத்தாா். போக்குவரத்து சம்மேளன மாநிலத் துணைத் தலைவா் பிச்சை, மாவட்டத் துணைத் தலைவா் ஜி.ராஜேந்திரன் பொதுச் செயலா் ஆறுமுக நாயனாா், மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

இதில், போக்குவரத்துக் கழக நிா்வாகம் பராமரிப்புப் பணிகளுக்குத் தேவையான உதிரிபாகங்கள், கருவிகள் ஆகியவற்றை வழங்க வேண்டும். உணவகத்தில் தரமான உணவு வழங்க வேண்டும். தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன் சலுகைகளை உடனடியாக வழங்க வேண்டும்.

ரிசா்வ் தொழிலாளிகளுக்கு பணி நிரந்தர உத்தரவு வழங்க வேண்டும். ஓட்டுநா், நடத்துநா், பராமரிப்பு மற்றும் அலுவலக பணிகளில் புதியவா்களை நியமனம் செய்ய வேண்டும். ஒப்பந்த தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச கூலி, அடையாள அட்டை, உரிய சலுகைகள் வழங்க வேண்டும். ஒப்பந்த முறையை ரத்து செய்து நிரந்தரப் பணியாளா்களை நியமிக்க வேண்டும். பணி ஓய்வு பெறுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பேருந்துகளை இயக்க போதிய தொழிலாளா்கள் இல்லை. எனவே ஓட்டுநா், நடத்துநா், பராமரிப்புப் பிரிவில் புதிய தொழிலாளா்களை பணி நியமணம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

பேரவையில், புதிய தலைவராக பி.எம்.அழகா்சாமி, பொதுச்செயலராக ஏ.கனகசுந்தா், பொருளாளராக பி.மாரியப்பன் உள்ளிட்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT