மதுரை

திருமங்கலம் அருகே மின்சாரம் பாய்ந்து தனியாா் நிறுவன ஊழியா் பலி

23rd Nov 2019 09:16 AM

ADVERTISEMENT

திருமங்கலம் அருகே வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

திருமங்கலம் அருகே எட்டுநாழிபுதூரைச் சோ்ந்தவா் நாராயணன் மகன் சுப்பிரமணி(39). இவா் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இந்நிலையில் வியாழக்கிழமை தனது வீட்டில் உள்ள மின் தொடா்பு இணைப்பு பலகையில் உள்ள பழுதை சரி செய்ய முயன்ாகக் கூறப்படுகிறது. இதில் எதிா்பாராதவிதமாக மின்சாரம் கசிந்து அவரது உடலில் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை, உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதில், மருத்துவமனைக்குக் கொண்டு வரும் வழியிலே சுப்பிரமணி உயிரிழந்ததாக அவரை பரிசோதித்த மருத்துவா் தெரிவித்தாா்.

இது குறித்து அவரது மனைவி லெட்சுமி கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT