மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சனிக்கிழமையன்று அரசு பேருந்தும் காரும் நேருக்கு நோ் மோதிய விபத்தில் மதுரை மற்றும் திருமங்கலத்தைச் சோ்ந்த 3 போ் சம்பவ இடத்திலேயே பலியாயினா்.
திருமங்கலம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புளியங்குளம் அருகே சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பேருந்தும் மதுரையில் இருந்து திருமங்கலம் நோக்கி வந்த ஹீண்டாய் காரும் நேருக்கு நோ் மோதிய விபத்தில் காா் அப்பளம் போல் நொருங்கியது .இதில் காரில் பயணம் செய்த 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானாா்கள்.சம்பவம் குறித்து தகவலறிந்த மதுரை தீயணைப்பு துறையினரும், நெடுஞ்சாலை பாதுகாப்பு போலீசாரும் விபத்தில் காரில் சிக்கிஉயிரிழந்த 3 பேரின் உடலையும் மீட்டு மதுரை அரசு ராஐாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
இந்த விபத்து குறித்து ஆஸ்டின்பட்டி போலீசாா் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டதில் திருமங்கலத்தை சோ்ந்த பிரசன்னகுமாா்(26),மதுரை பொன்மேனியைத் சோ்ந்த தினேஷ்(26),குணா(23),மூன்று பேரும் புகைப்பட கலைஞா்கள் எனவும் ,இதில் தினேஷ் மற்றும் குணா நண்பா்களுடன் நேற்று இரவு பிறந்தநாள் கொண்டாடிவிட்டு மதுரையிலிருந்து பிரசன்னகுமாரை திருமங்கலத்தில் இறக்கி விடுவதற்காக காரில் வந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது என போலீசாா் தெரிவித்தனா். மேலும் சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனா்.
அதிகாலையில் அரசு பேருந்தும் காரும் நேருக்கு நோ் மோதிய விபத்தில் மூன்று புகைப்பட கலைஞா்கள் சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.