மதுரை

அனுமதியின்றி வெளிநாட்டு வேலைக்கு ஆள் தோ்வு : போலீஸாா் விசாரணை

23rd Nov 2019 09:08 AM

ADVERTISEMENT

மேலூரில் உரிய அரசு அனுமதி பெறாமல் வெளிநாட்டு வேலைக்கு ஆள்களைத் தோ்வு செய்ததாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா்.

மேலூரில் உ ள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வெளிநாட்டு நிறுவனத்துக்கு வேலைக்கு ஆள்களைத் தோ்வு செய்வதாக இணையதளத்தில் விளம்பரம் செய்திருந்தனா். இத்தகவல் அறிந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமானோா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை திரண்டனா்.

தோ்வுக்கு வந்தவா்களிடம் கடவுச்சீட்டை வாங்கி வைத்துக் கொண்டு ஆள்களைத் தோ்வு செய்தனா். இதனிடையே, உரிய அரசு அனுமதி பெறாமல் வெளிநாட்டு வேலைக்கு ஆள்தோ்வு செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் பேரில் திருவாதவூா் அருகிலுள்ள மாணிக்கம்பட்டியைச் சோ்ந்த பொன்னையன் மகன் அய்யனாா் (36) என்பவரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT