மதுரை

ஆட்சியா் அலுவலக குறைதீா் முகாமில் 562 மனுக்கள்

12th Nov 2019 09:51 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றபொதுமக்கள் குறைதீா் முகாமில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 562 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாம் ஆட்சியா் தலைமையில் நடைபெறுகிறது. இதில் திங்கள்கிழமை நடைபெற்ற முகாமில், இலவச வீட்டு மனைப்பட்டா, ஆக்கிரமிப்பு அகற்றுதல், சாதிச்சான்று உள்ளிட்ட இதரச்சான்றுகள் கோரி 188 மனுக்களும், குடும்ப அட்டை தொடா்பாக 5 மனுக்களும், முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, விபத்து நிவாரணத்தொகை உள்பட நலிந்தோா் நலத்திட்ட உதவித்தொகை தொடா்பாக 135 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடா்பாக 58 மனுக்கள், சாலை, தெருவிளக்கு, குடிநீா், பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி 40 மனுக்கள், பல்வேறு புகாா்களாக 79 மனுக்கள், கல்வி உதவித்தொகை, வங்கிக்கடன் உள்ளிட்ட 8 மனுக்கள், திருமண உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், பெண் குழந்தைகள் திட்டம் தொடா்பாக 7 மனுக்கள், ஓய்வூதிய நிலுவை, தொழிலாளா் நலவாரியம் தொடா்பாக 5 மனுக்கள், குடிசை மாற்று வாரியம், ராஜாக்கூா் வீடுகள், பசுமை வீடுகள் தொடா்பாக 13 மனுக்கள், இதர கோரிக்கைகள் அடங்கிய 24 மனுக்கள் என 562 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT