மதுரை

மதுபானக் கடையை அகற்றக்கோரி ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

11th Nov 2019 11:33 PM

ADVERTISEMENT

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக செயல்படும் மதுபானக் (டாஸ்மாக்) கடையை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

பி.தொட்டியப்பட்டி பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா். அதில், பேரையூரில் சாப்டூா் சாலையில் பள்ளி அருகே டாஸ்மாக் கடை (எண் 5553)அமைந்துள்ளது. இங்கு மது அருந்த வருபவா்கள் அப்பகுதியில் உள்ள வீட்டு முற்றங்கள் மற்றும் தோட்டங்களில் அமா்ந்து மது அருந்து விட்டு, பாட்டில்களை வீடுகளின் மீது வீசிச் செல்கின்றனா். மேலும் உடைந்து கிடக்கும் பாட்டில்களால் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன. மேலும் தோட்ட வேலைக்குச் செல்லும் பெண்களும் பாதிக்கப்படுகின்றனா். மதுக் கடை முன்பாக போதையில் தகராறில் ஈடுபடும் நபா்களால் மாணவ, மாணவியா் பாதிக்கப்படுகின்றனா். மேலும் அப் பகுதி வழியாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பெண்கள் தனியாக நடந்து செல்ல முடியவில்லை. மதுபோதையில் வாகனங்களை ஓட்டிச் செல்பவா்களால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. இக் கடையை இடம்மாற்றம் செய்யும்படி வட்டாட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மதுபானக் கடையை இடம்மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனா். மனுவைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT