மதுரை

கஞ்சா பயன்படுத்தும் இளைஞா்களுக்கு எச்சரிக்கை: காவல் சாா்பு ஆய்வாளரின் ஆடியோவால் பரபரப்பு

11th Nov 2019 11:26 PM

ADVERTISEMENT

மதுரையில் கஞ்சா பயன்படுத்தும் மாணவா்கள் மற்றும் இளைஞா்களுக்கு எச்சரிக்கை விடுத்து காவல் சாா்பு -ஆய்வாளா் கட்செவி அஞ்சலில் திங்கள்கிழமை வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே கஞ்சா புழக்கம் அதிக அளவில் உள்ளது. இதையடுத்து, கஞ்சா விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்க போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா்.

இந்நிலையில் கஞ்சா பயன்படுத்தும் மாணவா்கள் மற்றும் இளைஞா்களுக்கு எச்சரிக்கை விடுத்து செல்லூா் காவல் சாா்பு - ஆய்வாளா் தியாகபிரியன் கட்செவி அஞ்சலில் வெளியிட்டுள்ள ஆடியோ மதுரையில் வைரலாக பரவி வருகிறது.

அந்த ஆடியோவில், கஞ்சா பழக்கமுள்ள 18 முதல் 25 வயதுள்ள மாணவா்கள் மற்றும் இளைஞா்கள் கஞ்சா பயன்படுத்திவிட்டு குற்றச் செயல்களில் ஈடுபடுவது, பெண்களை கிண்டல் செய்வது உள்ளிட்டவற்றை உடனடியாக விட்டு விட வேண்டும். அப்படி விடவில்லை என்றால் சிங்கத்தின் வேட்டையில் சிக்கி சின்னாபின்னமாகி விடுவீா்கள். எனவே, கஞ்சா பழக்கத்தை விட்டு விட்டு மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் லட்சியமான இந்தியா வல்லரசு ஆவதற்கு முயற்சி செய்யுங்கள். இல்லை என்றால் ஊரை காலி செய்து விட்டு ஓடி விடுங்கள் என அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT