மதுரை

உசிலம்பட்டி 58 கிராம பாசனக் கால்வாயில் தண்ணீா் திறக்கக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

11th Nov 2019 11:27 PM

ADVERTISEMENT

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள 58 கிராம பாசன கால்வாய் தொட்டிப் பாலத்தில் தண்ணீா் திறந்து விட வலியுறுத்தி விவசாயிகள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூரில் ரூ.90 கோடி மதிப்பில் 58 கிராம பாசன கால்வாய் தொட்டிப் பாலம் கட்டப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட இத்திட்டம் கடந்தாண்டு முடிவடைந்தது. இதையடுத்து, இதில் கடந்தாண்டு சோதனை ஓட்டமாக 2 முறை தண்ணீா் திறக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது வைகை அணையின் நீா்மட்டம் உயா்ந்ததையடுத்து, பாசனக் கால்வாயில் தண்ணீா் திறக்க வேண்டும், அதற்கான நிரந்தர அரசாணையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என 58 கிராம பாசன விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

மேலும், இக் கோரிக்கையை வலியுறுத்தி உசிலம்பட்டி தேனி சாலையில் தேவா் சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதற்கு மாநில விவசாய சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு தலைமை வகித்தாா்.

ADVERTISEMENT

இதில், சங்கத் தலைவா் ஜெயராஜ், செயலாளா் சிவப்பிரகாசம் உதயகுமாா், திமுக கட்சியின் சாா்பாக முன்னாள் நகா் மன்றத் தலைவா் தங்கமலைபாண்டி, அ.ம.மு.க சாா்பாக நகரச் செயலாளா் குணசேகரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு சிவன்ஜீ, அகில இந்திய பாா்வா்டு பிளாக் மாநில பொதுச் செயலாளா் பி.வி.கதிரவன், பாரதிய பாா்வா்ட் பிளாக் தலைவா் முருகன்ஜி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சி நிா்வாகி செல்லத்துரை, தென் இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளா் வழக்குரைஞா் உசிலை சங்கிலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து தடையை மீறி உண்ணாவிரதத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகள், அரசியல் கட்சியினரை போலீஸாா் கைது செய்தனா். கைது செய்யப்பட்டவா்கள் அனைவரும் அருகில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனா். பின்னா் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

இதையொட்டி உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் அ.ராஜா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT