சாலைப் பணியாளர்கள் "தண்டோரா' போட்டு ஆர்ப்பாட்டம்

மதுரையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப் பணியாளர்கள் "தண்டோரா' போட்டு  செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மதுரையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப் பணியாளர்கள் "தண்டோரா' போட்டு  செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மதுரையில் நெடுஞ்சாலைத் துறை கோட்டக் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு   தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நெடுஞ்சாலைத் துறையின் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் கோட்டங்களைச் சேர்ந்த சாலைப் பணியாளர்கள் பங்கேற்றனர். 
கோட்டத் தலைவர்கள் டி.மனோகரன், ஆர்.ராஜா,  எம்.பரமேஸ்வரன், ஆர்.மாரி,  டி.நந்தகோபால், என்.மரியபகானியோ ஆகியோர் தலைமை வகித்தனர். மாநிலப் பொருளாளர் இரா.தமிழ் போராட்டத்தைத் தொடக்கி வைத்தார். மாநிலச் செயலர் டி.ராஜமாணிக்கம் சாலைப் பணியாளர்களின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.  
 கோட்டச் செயலர்கள் என். சோலையப்பன், ஆர்.சின்னப்பன்,  இரா.சிவக்குமார், எம்.மணிமாறன்,  ஏ.ஆரோக்கியதாஸ் , அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சு.ஜெயராஜராஜேஸ்வரன்,  மாவட்டச் செயலர் க.நீதிராஜா உள்ளிட்ட பலர் பேசினர்.
 சாலைப் பணியாளர்களின்  41 மாத பணிநீக்க காலத்தை,  பணிக் காலமாக அறிவித்து உத்தரவிடுவது,  சாலைப் பணியாளர்களுக்கு நிரந்தர ஊதிய தொகுப்பிலிருந்து மாத ஊதியம் வழங்குவது,  தொழில்நுட்ப கல்வித் திறன் பெறா ஊழியர்களுக்கான ஊதியத்தை சாலைப் பணியாளர்களுக்கு வழங்குவது, பணிநீக்கத்தால் உயிரிழந்த சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு விதிமுறைகளைத் தளர்த்தி பணி வழங்குவது, சாலைகள் பராமரிப்புப் பணியைத் தனியாருக்கு விடுவதைக் கைவிடுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com