மதுரை

மேலூர் அருகே குழாயில் உடைப்பு: வீணாகும் காவிரி கூட்டுக் குடிநீர்

25th Jun 2019 09:14 AM

ADVERTISEMENT

மேலூர் அருகே காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் இரு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு அதிகமான குடிநீர் வீணாகிச் செல்வதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
மேலூர் அருகே கல்லம்பட்டி கிராமத்தின் சாலையோரத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குடிநீர் இங்குள்ள மேல்நிலைத் தொட்டிகள் வாயிலாக அப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இக்குழாயில் தண்ணீரை கட்டுப்படுத்தும் வால்வை யாரோ சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்புக் காரணமாக அதிக அளவு தண்ணீர் வீணாக வழிந்தோடி அருகிலுள்ள பள்ளத்தில் குட்டைபோல தேங்கியுள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், கிடைக்கும் நீரையும் வீணாக விடாமல் குழாய் உடைப்பைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT