மதுரை

மாநகராட்சி மண்டலம் 4 இல் இன்று சிறப்பு குறைதீர் கூட்டம்

25th Jun 2019 09:14 AM

ADVERTISEMENT

மதுரை மாநகராட்சி மண்டலம் 4 இல் சிறப்பு குறைதீர் முகாம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) நடைபெற உள்ளது.
மதுரை மாநகராட்சி சார்பில் மண்டல வாரியாக சிறப்பு குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்படுகிறது. இக்கூட்டங்களில் மாநகராட்சி ஆணையர் நேரடியாக கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெறுகிறார். 
மேலும் மாநகராட்சியின் அழைப்பு மையம், கட்செவி அஞ்சல், முகநூல் ஆகியவற்றிலும் புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில் மாநகராட்சி மண்டலம் எண் 4 அலுவலகத்தில் சிறப்பு குறைதீர் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. 
மண்டல அலுவலகத்தில் காலை 10.30 முதல் 12 மணி வரை நடைபெறும் முகாமில் மாநகராட்சி ஆணையர் ச.விசாகன் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களை பெறுகிறார். 
இம்முகாமில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர், பாதாளச்சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய வரி விதித்தல் கட்டட வரைபட அனுமதி, தெரு விளக்கு உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு மனுக்கள் அளித்து பயன்பெறலாம் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT