மதுரை

பட்டதாரி ஆசிரியர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கல்

31st Jul 2019 09:41 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு விலையில்லா மடிக்கணினி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
மதுரை வருவாய் மாவட்டத்தில் மதுரை, திருமங்கலம், உசிலம்பட்டி, மேலூர் ஆகிய 4 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு அரசு சார்பில் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படுகிறது. 
இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்த ஏதுவாக  அவர்களுக்கும் அரசு சார்பில் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மதுரை வருவாய் மாவட்டத்தில் உள்ள 4  கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி மதுரை ஓசிபிஎம் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இதில் மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமி நாதன் பங்கேற்று ஆசிரியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். இதில் மதுரை, திருமங்கலம், மேலூர், உசிலம்பட்டி ஆகிய நான்கு கல்வி மாவட்டங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் 600-க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. இதில் நான்கு கல்வி மாவட்டங்களில் மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT