மதுரை

கல்லூரியில் அறிவுசார் சொத்துரிமை கருத்தரங்கு

31st Jul 2019 09:42 AM

ADVERTISEMENT

மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் அறிவுசார் சொத்துரிமை குறித்து சிறப்பு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் விலங்கியல் துறை சார்பில் அறிவுசார் உடைமை உரிமைகள் மற்றும் காப்புரிமை வாய்ப்புகள், சவால்கள் என்ற தலைப்பில் இந்த சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி துணை முதல்வர் நிர்மலா ரெபேக்கா பால் அறிமுகவுரையாற்றினார். அண்ணா பல்கலைக் கழக அறிவுசார் சொத்துரிமை மைய இயக்குநர் கந்தபாபு, அறிவுசார் உடைமைகள் உரிமைகள் மற்றும் காப்புரிமை, பதிப்புரிமை, முத்திரையின் முக்கியத்துவம் ஆகியவை குறித்து விளக்கிப் பேசினார். காப்புரிமை மற்றும் வடிவமைப்பு மைய துணை ஒருங்கிணைப்பாளர் பானுமதி காப்புரிமை பெரும் முறைகள் மற்றும் பின்பற்ற வேண்டிய சட்ட விதிமுறைகள் குறித்து விளக்கிப் பேசினார்.  முன்னதாக விலங்கியல் துறைத் தலைவர் சாரா சத்தியவதி வரவேற்றார்.  இதில் மாணவ மாணவியர் மற்றும் பேராசிரியைகள் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT