மதுரை

இக்னோ பல்கலை. மாணவர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

31st Jul 2019 09:42 AM

ADVERTISEMENT

இக்னோ பல்கலைக் கழக சிறந்த கண்டுபிடிப்புகளுக்கான மாணவர் விருதுக்கு  செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  இந்திராகாந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக் கழகம் பல்வேறு வகையான திறன்களையும் திறமையையும் கொண்ட மாணவர்களை கொண்டுள்ளது. பல்கலைக் கழகத்தின் முக்கிய அங்கமாக மாணவர்கள் இருப்பதால், புதுமையான கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்களை அடையாளம் கண்டு அங்கீகரிக்கும் திட்டத்தை 2018 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.
  இதன்படி இக்னோ பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை சிறந்த கண்டுபிடிப்புகளுக்கான மாணவர் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இக்னோவில் உள்ள தொலை நிலைக் கல்விக்கான தேசிய கண்டுபிடிப்பு மையம், பல்கலைக் கழகத்தில் கண்டுபிடிப்பாளர்களை அடையாளம் காணவும், அங்கீகரிக்கவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. எனவே இக்னோ மாணவர்களின் சிறந்த கண்டுபிடிப்புகள் வரவேற்கப்படுகின்றன. மாணவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை இயக்குநர், தொலைநிலைக் கல்விக்கான தேசிய கண்டுபிடிப்பு மையம், புதுதில்லி என்ற முகவரிக்கு சமர்ப்பிக்கலாம். 
  தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த மூன்று கண்டுபிடிப்புகளுக்கு ரொக்கப் பரிசுகள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை w‌w‌w.‌i‌g‌n‌o‌u.​a​c.‌i‌n என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று இக்னோ மதுரை மண்டல இயக்குநர் எஸ்.மோகனன் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT