மதுரையில் மாநில கராத்தே போட்டிக்கான மாணவர் தேர்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
மதுரையில் சோபுகாய் கோஜூரியூ கராத்தேப் பள்ளியின் மாநில அளவிலான போட்டிகள் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான தேர்வு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் மாணவி ஜெயஸ்ரீ சிறப்பாக செயல்பட்டு சிறந்த மாணவியாக
தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களை சோபுகாய் கோஜூரியூ பள்ளியின் தலைமை பயிற்சியாளர் ரென்சி சுரேஷ்குமார் வழங்கினார். நிகழ்ச்சியில் கராத்தே பயிற்சியாளர்கள் பாரத், கார்த்திக், கௌரி சங்கர், அங்குவேல், பாலகாமராஜன், ஆனந்த், மாரி, யோகேஸ் ஆகியோர் பங்கேற்றனர்.