நீர்நிலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் செல்லூர் கண்மாயில் தூய்மைப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கம், மண்ணின் மைந்தர்கள் இயக்கம், இயற்கை சுற்றுச்சூழல் சங்கம் மற்றும் மதுரை மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களுடன் இணைந்து செல்லூர் கண்மாயில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. கண்மாயில் ஆங்காங்கே கொட்டப்பட்ட குப்பைகள் கழிவுகள் சேகரிக்கப்பட்டு மாநகராட்சி துப்புரவு வாகனங்கள் மூலமாக அப்புறப்படுத்தப்பட்டன. நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்க நிறுவனர் அபுபக்கர், வழக்குரைஞர் ஜமாலுதீன், துரை விஜயபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.