மதமாற்றத்தை தடுக்கக் கோரி காட்டு நாயக்கர் சமூகத்தினர் நூதன முறையில் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
மதுரையை அடுத்த பரவை பேரூராட்சிக்கு உள்பட்ட சத்தியமூர்த்தி நகரில் காட்டு நாயக்கர் சமூகத்தினர் ஏராளமானோர் வசிக்கின்றனர். இந்நிலையில், காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை கிறிஸ்துவ அமைப்பினர் மதமாற்றம் செய்வதாக புகார் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்துக்கு குடுகுடுப்பை அடித்தவாறு வந்த காட்டு நாயக்கர் சமூகத்தினர், மதமாற்றத்தைத் தடுக்கக் கோரி மனு அளித்தனர்.