மதுரை

மாநில ஹாக்கி: இறுதிப்போட்டிக்கு இந்தியன் வங்கி, ஐசிஎப் அணிகள் தகுதி

27th Jul 2019 07:11 AM

ADVERTISEMENT

மதுரையில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கி இறுதிப்போட்டிக்கு சென்னை இந்தியன் வங்கி அணியும், ஐசிஎப் அணியும் தகுதி பெற்றுள்ளன.
மதுரை ரிசர்வ்லைன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் எம்ஜிஆர் விளையாட்டரங்கில் மாநில அளவிலான ஹாக்கி போட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநில அளவிலான இப்போட்டியில் இந்தியன் வங்கி,  பாரத ஸ்டேட் வங்கி, தெற்கு ரயில்வே, தமிழக காவல் துறை, மதுரை மாநகரக் காவல், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழகம் முழுவதும் உள்ள அரசு விளையாட்டு விடுதி அணிகள் உள்ளிட்ட அணிகள் பங்கேற்றன. இதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் சென்னை இந்தியன் வங்கி அணியும், விளையாட்டு விடுதி அணியும் மோதின. இதில் 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியன் வங்கி அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.  மற்றொரு அரையிறுதிப்போட்டியில் சென்னை ஐசிஎப் அணியும், மாநில கணக்காயர் அணியும் மோதியதில் 2-0 என்ற கோல் கணக்கில் ஐசிஎப் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இதையடுத்து சனிக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை இந்தியன் வங்கி அணியும், ஐசிஎப் அணியும் மோதுகின்றன. இதில் மூன்று மற்றும் நான்காவது இடங்களுக்கு கோவில்பட்டி விளையாட்டு விடுதி அணியும், மாநில கணக்காயர் அணியும் மோதுகின்றன.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT