மதுரை

போலீஸ் -  பொதுமக்கள் நல்லுறவுக் கூட்டம்

22nd Jul 2019 08:15 AM

ADVERTISEMENT

திருப்பரங்குன்றத்தில் போலீஸ் - பொதுமக்கள் நல்லுறவுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதியில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, திருப்பரங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் மதனகலா தலைமை வகித்தார். 
கூட்டத்தில், நகரத்தில் குற்றச்செயல்கள் நடக்காதவாறு தடுக்க ஆங்காங்கே மக்கள் அதிகம் கூடும் இடங்கள், மக்கள் நடமாட்டமில்லாத பகுதிகள், முக்கிய தெருக்களில் கண்காணிக்க வணிக நிறுவனங்கள் ரகசிய கேமராக்களை பொருத்தவேண்டும். பொதுமக்கள் எப்போதும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். 
காவல் துறை உங்களுக்கு சேவை செய்ய தயாராக உள்ளது. எங்களிடம் பயமின்றி தைரியமாக உங்களது பிரச்னைகள் குறித்த புகார்களை தெரிவிக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர். இக் கூட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT