மதுரை

டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் தகுதி போட்டி: மாநிலப் போட்டிக்கு 100 பேர் தேர்வு

22nd Jul 2019 08:20 AM

ADVERTISEMENT

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில், 100 பேர் மாநில போட்டிக்குத் தகுதிபெற்றனர்.
      தமிழ்நாடு டேக்வாண்டோ சங்கத்தின் சார்பில், மதுரையில்  மாவட்ட அளவிலான டேக்வாண்டோ தகுதி போட்டிகள், டால்ஃபின் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. போட்டியின் தொடக்க விழாவுக்கு, மதுரை மாவட்ட டேக்வாண்டோ சங்கத் தலைவர் நாராயணன் தலைமை வகித்தார். போட்டிகளை, பள்ளித் தாளாளர் கண்மணி தொடக்கி வைத்தார்.     இதில், மாவட்டம் முழுவதுமிருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என  40 பள்ளிகளிலிருந்தும், டேக்வாண்டோ பயிற்சி பள்ளிகளிலிருந்தும்  450-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். மாணவ, மாணவியரின் வயது மற்றும் உடல் எடை ஆகியவற்றின் அடிப்படையில் போட்டிகளில் பங்கேற்றனர். 
     மூன்று சுற்றுகள் கொண்ட போட்டியில், அதிக புள்ளிகள் பெற்றவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். போட்டிகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு பதக்கங்கள், கோப்பைகள் வழங்கப்பட்டன. 
     மாவட்ட அளவிலான இப்போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட 100 பேர், மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிக்கு தகுதி பெற்றனர். போட்டிக்கான ஏற்பாடுகளை, மதுரை மாவட்ட டேக்வாண்டோ சங்கம் செய்திருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT