மதுரை அருகே கோயில் திருவிழாவில் முதல் மரியாதை யாருக்கு என்பதில் ஏற்பட்ட தகராறில், 10 பேர் கொண்ட கும்பலால் முதியவர் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம், சிலைமான் அருகே இளமனூர் பகுதியைச் சேர்ந்தவர் காஞ்சிவனம்(55). அதே பகுதியைச் சேர்ந்தவர் வழக்குரைஞர் கருப்புசாமி. இவர்கள் இருவரும் உறவினர்கள்.
இந்நிலையில்,இளமனூரில் உள்ள அய்யனார் கோயிலில் 6 மாதத்திற்கு முன்பு நடைபெற்ற திருவிழாவில் முதல் மரியாதை யாருக்கு என்பது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு காஞ்சிவனம் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, கருப்புசாமி உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பல், அவரை வீட்டு வாசல் முன்பு வைத்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இச் சம்பவத்தை தடுக்க முயன்ற களஞ்சியத்தின் மகள் தங்கத்தை அந்த கும்பல், உருட்டு கட்டையால் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவர், அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக காஞ்சிவனம் மனைவி தனலெட்சுமி அனித்த புகாரின் பேரில் வழக்குரைஞர் கருப்புசாமி, சின்னு, தெய்வேந்திரன், பாலமுருகன் உள்ளிட்ட 10 பேர் மீது சிலைமான் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாகியுள்ள அவர்களை தேடி வருகின்றனர்.