மதுரை

நாளை பொதுவிநியோக திட்ட குறைதீர் கூட்டம்

12th Jul 2019 09:17 AM

ADVERTISEMENT

அனைத்து வட்டம் மற்றும் குடிமைப் பொருள் சரகங்களில் தேர்வு செய்யப்பட்ட நியாயவிலைக் கடைகளில் பொதுவிநியோகத் திட்ட குறைதீர் முகாம் சனிக்கிழமை (ஜூலை 13) நடைபெறுகிறது.
இந்த முகாமில் பொதுவிநியோகத் திட்டம் தொடர்பான குறைகளை  அலுவலர்களிடம் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
முகாம் நடைபெறும் இடங்கள் விவரம்: 
மதுரை மத்திய சரகம் - பாண்டியன் கூட்டுறவு அங்காடி, வடக்குமாசி வீதி, கிழக்கு சரகம் - திருமலை நாயக்கர் மகால் நியாய விலைக் கடை, பாலரெங்காபுரம், மேற்கு சரகம் - எஸ்.எஸ்.காலனி கடை, வடக்கு சரகம் - பாண்டியன் கூட்டுறவு அங்காடி, கிருஷ்ணாபுரம் காலனி, வடக்கு வட்டம் - திருமோகூர் நியாய விலைக் கடை, மேலூர் - சின்னகொட்டாம்பட்டி, வாடிப்பட்டி - சொக்கலிங்கபுரம், உசிலம்பட்டி - சீமானுத்து, திருமங்கலம் - செக்காணூரணி கடை எண்: 1, பேரையூர் வட்டம் - எஸ்.மேலப்பட்டி, கள்ளிக்குடி - கே.வெள்ளாங்குளம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT