மதுரை

பிஎஸ்என்எல் ஊழியர்கள் இரண்டாவது நாளாக உண்ணாவிரதம்

4th Jul 2019 07:17 AM

ADVERTISEMENT

பிஎஸ்என்எல்-க்கு 4ஜி சேவை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் இரண்டாவது நாளாக புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். 
மதுரை மாவட்ட பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம், தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் சார்பில், தல்லாகுளம் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் தொடர் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.  இரண்டாவது நாள் போராட்டத்தில் சங்க மாவட்டச்செயலர் செல்வின் சத்தியராஜ் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT