மதுரை

பைக் மீது வேன் மோதி இளைஞர் பலி

2nd Jul 2019 08:11 AM

ADVERTISEMENT

மதுரை அருகே இருசக்கர வாகனத்தின் மீது மினி வேன் மோதியதில் இளைஞர்  ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
மதுரை நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த கணேசன் மகன் காமாட்சி(30). இவர் தனது தங்கை ராகவியுடன் இருசக்கர வாகனத்தில் மதுரை - தேனி சாலையில் ராஜம்பாடி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது,  அவ்வழியே வந்த மினி வேன், எதிர்பாராதவிதமாக  இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் காமாட்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
பலத்த காயமடைந்த ராகவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து நாகமலை புதுக்கோட்டை போலீஸார் மினிவேன் ஓட்டுநர் ராஜா  மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT