மதுரை

 பசுமலை மன்னர் கல்லூரி: தமிழில் உரைநடை வளர்ச்சி கருத்தரங்கம்

2nd Jul 2019 08:06 AM

ADVERTISEMENT

பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் தமிழில் உரைநடை வளர்ச்சி எனும் ஒரு நாள் கருத்தரங்கு  திங்கள்கிழமை நடைபெற்றது.  
 கல்லூரியின்  தமிழ்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பி.மனோகரன் தலைமை வகித்தார். கல்லூரி தலைவர் எஸ்.ராஜகோபால், செயலர் எம்.விஜயராகவன், பொருளாளர் எல்.கோவிந்தராஜன்  ஆகியோர்  முன்னிலை வகித்தனர். 
சிவகாசி ஸ்டாண்டர்டு பயர் ஒர்க்ஸ் ராஜரத்தினம் மகளிர் கல்லூரி தமிழ்துறை தலைவர் பா.பொன்னி சிறப்புரையாற்றி பேசியது: தேர்வில் மதிப்பெண் பெறவும், தேர்ச்சி பெறுவதற்காக மட்டுமே படிக்கக் கூடாது.  தொடர்ந்து வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய உள்ளன. தமிழ் உரைநடை சங்க காலத்திற்கு முன்பே உள்ளது. நமது வாழ்விற்கு  தேவையானவை தமிழ்  உரைநடையில் உள்ளன என்றார். முன்னதாக உதவி பேராசிரியர் கோ.தேவிபூமா வரவேற்றார். பேராசிரியர் தி.மல்லிகா நன்றி கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT