திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலை சோமப்பா சுவாமிகளின் 51 ஆவது ஆண்டு குருபூஜை விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் திருக்கூடல் மலையில் சோமப்பா சுவாமிகளின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. குருபூஜை விழா வையொட்டி காலையில் சிறப்பு யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து 10 மணிக்கு பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து திருப்பரங்குன்றம் ஏ.பி.ராஜா குழுவினரின் நாதசுரம், ஆன்மிக சொற்பொழிவு மற்றும் சிறப்பு அன்னதானம் நடந்தது. இதில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவில் மாலை 5 மணிக்கு தமிழிசையும் தொடந்து நாடகமும் நடைபெற்றது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை மாலை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் இரா.தட்சிணாமூர்த்தி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.