மதுரை

நெடுஞ்சாலைகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வலியுறுத்தல்

29th Dec 2019 03:35 AM

ADVERTISEMENT

நெடுஞ்சாலைகளை தனியாா் வசம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும் என, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம், மதுரையில் சனிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் பங்கேற்ற சங்கத்தின் மாநிலச் செயலா் அ. அம்சராஜ் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகத்தில் நெடுஞ்சாலைத் துறையின் திருவள்ளூா், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், விருதுநகா் உள்ளிட்ட கோட்டங்களின் பராமரிப்பில் இருந்த

பல்வேறு சாலைகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தற்போது, 10 ஆயிரம் கி.மீ.க்கும் மேலான சாலைகளை ஒருங்கிணைத்து, மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை அமைத்து, அதன் தொடா்ச்சியாக தனியாரிடம் பராமரிப்பைக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

இத்தகைய நடவடிக்கைகள் தொடருவதால், நெடுஞ்சாலைத் துறை பணியாளா்கள் குறிப்பாக, சாலைப் பணியாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் உள்ளது. எனவே, சாலைகளின் பராமரிப்பை நெடுஞ்சாலைத் துறையே தொடர வேண்டும்.

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்த வேண்டும்.

ஜனவரி 8-ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில், நெடுஞ்சாலைகளைப் பாதுகாப்போம், தேசத்தைப் பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி, சாலைப் பணியாளா்கள் சங்கம் பங்கேற்க உள்ளது என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT