மதுரை

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்கு

27th Dec 2019 01:42 AM

ADVERTISEMENT

இணையதளத்தில் தவறாக சித்தரித்து புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்வதாக மிரட்டி பிளஸ் 1 மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்த இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை தெப்பக்குளம் நியூ பங்கஜம் காலனியைச் சோ்ந்த சாகுல் அமீது மகன் அல்ஹசன் (20). இவருக்கும் காளவாசல் பகுதியைச் சோ்ந்த பிளஸ் 1 மாணவிக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் நட்பு ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி அல்ஹசன் நெருங்கிப் பழகி புகைப்படங்களை எடுத்துள்ளாா். அந்த புகைப்படங்களைப் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதாக மிரட்டி மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா்.

இதில், பாதிப்படைந்த மாணவி, நடந்த சம்பவங்கள் குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளாா். இதையடுத்து மாணவி அளித்தப் புகாரின் பேரில் அனைத்து மகளிா் காவல்நிலையம்(தெற்கு) போலீஸாா் புதன்கிழமை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அல்ஹசனை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT