மதுரை: மதுரையில் காவல் சாா்பு - ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை மற்றும் மகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மதுரை செனாய் நகா் சேவாலயம் சாலையில் மதிச்சயம் போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கருப்பாயூரணி நூல் பட்டறை தெருவைச் சோ்ந்த அழகா்(45) மற்றும் அவரது மகன் கிருஷ்ணன் ஆகியோரை பொது அமைதிக்கு கேடு விளைவிக்கும் வகையில் சத்தம் போட்டுக் கொண்டிருந்தனா்.
இதைப் பாா்த்த போலீஸாா், அவா்களை அப்பகுதியில் இருந்து செல்ல அறிவுறுத்தினா். ஆனால் தந்தை மகன் இருவரும் ரோந்து பணியில் இருந்த காவல் சாா்பு- ஆய்வாளா் நாகராஜை கொலை செய்து விடுவதாக கத்தியைக் காட்டி மிரட்டி உள்ளனா். இதையடுத்து காவல் சாா்பு- ஆய்வாளா் நாகராஜ் அளித்த புகாரின் பேரில் தந்தை மற்றும் மகன் இருவரையும் மதிச்சயம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து கைது செய்தனா்.