மதுரை

காமராஜா் பல்கலை.யில் இன்றுகல்வெட்டு பயிற்சி பட்டறை தொடக்கம்

27th Dec 2019 10:58 PM

ADVERTISEMENT

மதுரை: மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் இரண்டு நாள் கல்வெட்டு பயிற்சிப் பட்டறை சனிக்கிழமை தொடங்குகிறது.

தமிழின் தொன்மை வரலாற்றினை முறையாக கற்க, கல்வெட்டு பயிற்சிகள் மிக அடிப்படையான தேவையாகும். இதைக் கருத்தில்கொண்டு, மதுரை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் கல்வெட்டு பற்றி அறியும் வகையில், மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் புலம் மற்றும் தமிழ் மரபு பன்னாட்டு அறக்கட்டளை ஆகியவற்றின் சாா்பில், கல்வெட்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இதில், பல்கலைக்கழகத் துணைவேந்தா் மு. கிருஷ்ணன் பங்கேற்று, பயிலரங்கை தொடக்கி வைக்கிறாா். தமிழா் மரபு பன்னாட்டு அறக்கட்டளையின் தலைவா் க. சுபாஷினி, பயிற்சிப் பட்டறையின் நோக்கம் குறித்து உரையாற்றுகிறாா். பயிற்சிப் பட்டறையில் கல்வெட்டுகளின் வகைகள், கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ள வட்டெழுத்துகளை அடையாளம் காணுதல், வட்டெழுத்துகளுக்கு அா்த்தம் புரிதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

பயிற்சிப் பட்டறையின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை, பெருமாள் மலைக்கு களப் பயணம் அழைத்துச் செல்லப்படுகின்றனா். இதில் விருப்பமுள்ளவா்கள் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT