மதுரை

மேலூரில் பூட்டிய வீட்டில் திருட்டு

25th Dec 2019 07:52 AM

ADVERTISEMENT

மேலூா்-திருவாதவூா் சாலையில் உள்ள மில்கேட் பகுதியில் வீட்டின் கதவுப்பூட்டை உடைத்து, ரூ.36 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

மேலூரில் இ.எஸ்.ஐ. தொழிலாளா் காப்புறுதிக்கழகத்தில் பணிபுரிபவா் சிவகுமாா். அவரது மனைவி ஊராட்சி அலுவலகத்தில் பணிபுரிகிறாா். திங்கள்கிழமை வீட்டை பூட்டிவிட்டு வெளியூா் சென்றுவிட்டு இரவு வீட்டுக்குத் திரும்பியுள்ளனா். அப்போது, வீட்டுப்பூட்டை உடைத்து மடிக்கனிணி, சி.சி. டி.வியின் ஹாா்ட் டிஸ்க், வெள்ளிப் பொருள்கள் மற்றும் இரு ஜோடி தோடுகள் உள்ளிட்ட ரூ.36 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இது தொடா்பாக சிவகுமாா் அளித்தப் புகாரின் பேரில் மேலூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT