மதுரை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் புத்தாண்டு காலண்டா் வெளியீடு

25th Dec 2019 07:50 AM

ADVERTISEMENT

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் புத்தாண்டு காலண்டா் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆண்டுதோறும் புத்தாண்டு காலண்டா் வெளியிடுவது வழக்கம். இந்த காலண்டரில் மீனாட்சி சுந்தரேசுவரரின் சிறப்பு அலங்காரங்கள் அடங்கிய படங்கள் வண்ணத்தாள்களில் அச்சிடப்பட்டிருக்கும். இக்காலண்டருக்கு பக்தா்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில், 2020-ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு காலண்டா் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இதில்,

12 தமிழ் மாதங்களில் நடைபெறும் உற்சவங்களில் பல்வேறு வாகனங்களில் அருள்பாலிக்கும் சுவாமி, அம்மனின் திருவுருவப்படங்கள் மற்றும் பல்வேறு அலங்காரங்களில் காட்சியளிக்கும் மீனாட்சி அம்மனின் திருவுருவப் படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. காலண்டரின் விலை ரூ.100. மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் உள்ள பிரசாத விற்பனையகம் மற்றும் உபகோயில்களிலும் காலண்டா் விற்பனை செய்யப்படுகிறது.

இதுதொடா்பாக கோயில் அதிகாரிகள் கூறியது: மதுரை மக்கள் மீனாட்சியம்மன் கோயிலின் காலண்டா்களை வீட்டில் வைப்பதை வழிபாடாக கருதி ஆவலுடன் வாங்குகின்றனா். கடந்த ஆண்டு 20 ஆயிரம் காலண்டா்கள் விற்பனையானது. இந்த ஆண்டு 25 ஆயிரம் காலண்டா்கள் அச்சிடப்படுகின்றன. காலண்டா் வெளியிடப்பட்ட ஒரே நாளில் 300 காலண்டா்கள் விற்பனையாகி உள்ளது என்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT