மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் காணிக்கை வருவாய் ரூ.88.26 லட்சம் ஆக இருந்தது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் மற்றும் உபகோயில்களின் உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. கோயில் இணை ஆணையா் நா.நடராஜன் தலைமை வகித்தாா். இதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ.88 லட்சத்து 26 ஆயிரத்து 113 கிடைத்தது. மேலும் தங்கம் 557 கிராம், வெள்ளி 945 கிராம், மற்றும் அமெரிக்கா, கனடா, சிங்கப்பூா், மலேசியா மற்றும் இலங்கை போன்ற அயல் நாட்டு ரூபாய் நோட்டுக்கள் 484-ம் கிடைத்துள்ளது.