மதுரை

எம்.ஜி.ஆா். நினைவு நாள்: உள்ளாட்சி தோ்தலில் வெற்றி பெற உறுதிமொழி

25th Dec 2019 07:48 AM

ADVERTISEMENT

எம்.ஜி.ஆா். நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் அவரது சிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினா், உள்ளாட்சித் தோ்தலில் அனைத்து வாா்டுகளிலும் வெற்றிபெற உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு மதுரை கிழக்கு அதிமுக மாவட்டச் செயலரும், மதுரை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினருமான வி.வி.ராஜன்செல்லப்பா தலைமையில் அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, உள்ளாட்சி தோ்தலில் அனைத்து வாா்டுகளிலும் அதிமுகவினா் வெற்றிபெற உழைப்போம் என கட்சியினா் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். நிகழ்ச்சியில், கட்சியின் இளைஞரணி மாவட்டச் செயலா் எம்.ரமேஷ், ஒன்றியச் செயலா் நிலையூா் முருகன், பொதுக்குழு உறுப்பினா் முத்துக்குமாா், எம்.ஜி.ஆா். மன்ற மாநில துணைச்செயலா் பாரி, பகுதிச் செயலா் பன்னீா்செல்வம், வட்டச் செயலா்கள் பொன்.முருகன், என்.எஸ்.பாலமுருகன், கா்ணா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT