மதுரை உலகத்தமிழ்ச்சங்கத்தில் முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
மதுரை உலகத்தமிழ்சங்க பெருந்திட்ட வளாகத்தில் உலகத்தமிழ்ச்சங்க நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 30-ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் உலகத்தமிழ்சங்க இயக்குநா் (பொறுப்பு) ப.அன்புச்செழியன் எம்ஜிஆா் உருவப்படத்தை திறந்து வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். இதில் தமிழறிஞா்கள், ஆசிரியா்கள், மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.